முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் pasumai veedu thittam

 அறிமுகம்

தமிழ்நாடு அரசு கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் வகையில் “சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்” தொடங்கி 300 சதுர அடி அளவில் ரூ 1.80 இலட்சம் அலகு தொகையில் முழு செலவினையும் ஏற்று வீடுகளை கட்டி கொடுக்கிறது. அதன்படி ஒவ்வொரு வீடும் ரூ 1.80 இலட்சம் அலகுத் தொகையில் 300 சதுர அடி பரப்பளவில் R+10ரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளை ஆண்டு ஒன்றுக்கு 60000 வீடுகள் என்ற அடிப்படையில், 2011-12ல் தொடங்கி வீடுகள் கட்ட அரசு ஆணையிட்டுள்ளது. 

09.04.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விதி 110ன் கீழ் R+ரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீட்டிற்கான அலகுத் தொகையினை ரூ 1.80 இலட்சத்திலிருந்து ரூ 2.10 இலட்சமாக வழங்கப்படும் எனவும் அறிவிப்பு செய்தார்கள்.


இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்

ஊரக பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அனைவரும் R+ரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் பெற தகுதியானவர்கள்


ஓவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவில் ரூ2.10 இலட்சம் அலகுத் தொகையில் மாநில அரசின் முழுநிதி உதவியுடன் கட்டப்படுகிறது.


ஓவ்வொரு வீடும், வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையல் அறை, கழிப்பறை, தாழ்வாரம் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஆகியவற்றை கொண்டிருக்கும்.


ஓவ்வொரு வீட்டிலும் சு10ரிய மின் சக்தியில் எரியும் 5 அடர்குறு விளக்குகள் அமைக்கப்படும்.


வீடுகள் கட்டும் பணி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டள்ளது. சு10ரிய மின்சக்தி விளக்குகள் அமைக்கும் பணி தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலமாக செயல்படுத்தப்படும்.


வீட்டுமனைப்பட்டா உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் ஆவர்.


பயனாளிகளின் தகுதிகள்

சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் வசிப்பராக இருக்க வேண்டும்.


சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.


3000 சதுர அடிக்கு குறையாத வீட்டு மனை சொந்தமாக இருக்க வேண்டும்.


குடும்ப தலைவரின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் பெயரிலோ வில்லங்கமற்ற வீட்டு மனைப்பட்டா இருக்க வேண்டும்.


தொடர்புடைய கிராம ஊராட்சியில் அல்லது வேறு எங்கும் கான்கிரிட் கூரை போடப்பட்ட சொந்த வீடு எதவும் இருக்கக் கூடாது.


அரசின் இதர வீடு கட்டும் திட்டங்களில் பயன்பெற்றவராக இருக்கக் கூடாது.


பயனாளிகள் தேர்வு செய்யும் முறை

29 விழுக்காடு ஆதிதிராவிடர்களுக்கும்,1 விழுக்காடு பழங்குடியினர்களுக்கும்,70 விழுக்காடு இதர இனங்களுக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படும் போது மாற்றுத் திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் ஒய்வு பெற்ற முன்னாள் துணை இராணுவ படையினர், ஊரகப் பகுதிகளில் வாழும் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்கள்.


திருநங்கைகள், ஹெச்ஐவிஃஎய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், வெள்ளம், தீ விபத்து போன்ற இதர பிற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டோர் மனநலம் குன்றியோர் உள்ள குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.


வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தகுதிவாய்ந்த பயனாளிகளை வழிகாட்டி நெறிமுறைகளின்படி தேர்வு செய்து இறுதி செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியலை கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post